ஆ.ராசா போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கோயம்புத்தூர் காலை வைத்து பாருடா நாயே.. அதே மாதிரி இந்து சனாதனத்தை உடைக்கிறேன் மயிரை உடைக்கிறேன் எவனாவது வந்தீங்க பிஞ்ச செருப்பால அடிப்பேன் நாய்ங்களா.
அண்மையில் பீளமேடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது ஆ.ராசா பேசுகையில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான், நீ பஞ்சமன்தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டதகாதவன் தான். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையானது. இந்து மதம் குறித்து பேசிய ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக கூறி வருகின்றனர். அவருக்கு எதிராக இந்த அமைப்பினர் போராட்டம் மற்றும் பாஜகவில் பல்வேறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க;- A.ராசா அவர்களே நாவடகத்துடன் இருங்கள்!இனியும் ஹிந்து நம்பிக்கைகளை அவமதித்தால் இது தான் நடக்கும்! BJP எச்சரிக்கை
இந்நிலையில், கோவை பீளமேட்டில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி;- ஆ.ராசா போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கோயம்புத்தூர் காலை வைத்து பாருடா நாயே.. அதே மாதிரி இந்து சனாதனத்தை உடைக்கிறேன் மயிரை உடைக்கிறேன் எவனாவது வந்தீங்க பிஞ்ச செருப்பால அடிப்பேன் நாய்ங்களா. என்னடா மயிறு தெரியும் இந்து இந்து சனாதன தர்மத்தை பற்றி. அறிவு கெட்ட நாய்களா. திமுக இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என பகிரங்கமாக கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி எச்சரிக்கை விடுத்தார்.
இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து த.பெ.தி.க.வினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த பிறகு உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, கோவையில் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட உத்தம ராமசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலை மறியல் மற்றும் போலீசிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க;- ஆ.ராசா பேச்சை ஒட்டி வெட்டி திரித்து வெளியிடுவதா? பாஜக வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது.. கி.வீரமணி..!