வழக்குகளில் இருந்து தப்பிக்கவே அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்திருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்
அதிமுக ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி திடீரெனடெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இபிஎஸ், தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும், போதை பொருட்கள் நடமாட்டம் தொடர்பாக புகார் அளித்ததாக தெரிவித்தார். ஆனால் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்தித்தது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தான் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அமித்ஷாவை சந்தித்தது ஏன்..?
இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த உறவினர்களால் கர்நாடாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு பணம் கொடுத்த பிரச்சனையில் லோக் ஆயுக்தாவில் மாட்டிக் கொண்டதாக தெரிவித்தார். எனவே இந்த வழக்குகளில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் இந்த வாரம் கைது செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தான் தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தனது மகனை காப்பாற்ற, மருமகளை காப்பாற்ற டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்ததாக கூறுகிறார்கள் என தெரிவித்தார். ஏதோ எடப்பாடி பழனிசாமிக்கு பிரச்சனை இருப்பதன் காரணமாகவே இபிஎஸ் மூஞ்சியைதொடங்கப்போட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இபிஎஸ்க்கு தகுதி இல்லை
பண்ருட்டி ராமச்சந்திரன் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவர் உடன் இருப்பவர்களுக்கும் தகுதி தகுதி இல்லையென்று தெரிவி்த்தவர், 26 வயதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என கூறினார். எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லையென்று கூறியவர், அதிமுகவிற்காக ஒரு சொட்டு ரத்தம் சிந்தினாரா என கேள்வி எழுப்பினார். சசிகலா, எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவி வாங்கி கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த நேரம் இபிஎஸ் ரோட்டில் சுற்றிக் கொண்டிருப்பார்.
ஓபிஎஸ்க்கு முக்கியத்துவம்
ஜெயலலிதா இருக்கும் பொழுது ஓபிஎஸ்க்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள். இரண்டு முறை முதலமைச்சராகவும் ஆக்கினார்கள் என தெரிவித்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் போன கட்சி விளங்காது என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் சட்டமன்ற உறுப்பினராக பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார், மத்தியில் அமைச்சராக பாமகவுடன் சேர்ந்தவர்கள் இருந்தார்கள், தேமுதிக கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. சட்டமன்றத்தில் எதிர்காட்சியாக தேமுதிக இருந்ததாகவும் கோவை செல்வராஜ் கூறினார்.
இதையும் படியுங்கள்