விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் தற்போது பரவி வரும் காய்ச்சலை தடுப்பது அரசின் கடமை. எளிதாக பரவும் காய்ச்சல் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் நிலை உள்ளது. இதை தடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கோதாவரி - காவிரி இணைப்பு நடந்ததாய் வாழி காவிரி திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அனைத்து பகுதிகளிலும் தடையில்லாமல் கிடக்கிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். திமுகவில் இருந்து ஓவ்வொருவராக விலகுவது திராவிட மாடல் அரசின் சாதனை.
undefined
கீழ்த்தரமாக இந்து மதத்தை புண் படுத்தும் விதமாக ராசா பேசியது கண்டிக்கத்தக்கது. ஆ.ராசா குறிப்பிட்ட அந்த வார்த்தை அவருடைய கட்சி தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா? அவருடை மருமகன் சபரீசன் அண்மையில் திருச்செந்தூர் சென்று யாகம் நடத்தினார். அவருக்கு அந்த வார்த்தை பொருந்துமா என்று கேட்டேன். இதற்கு அவரது கட்சி தலைவர் பதில் அளிப்பார் என எதிர்பார்த்தேன். பதில் கிடைக்கவில்லை.
அதிமுக விவகாரமாக டெல்லி சென்றதாக சொல்வது தவறானது. நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு நிலுவையில் இருக்கும் போது அதை பற்றி பேசுவது சரியல்ல. விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் தற்போது பரவி வரும் காய்ச்சலை தடுப்பது அரசின் கடமை. எளிதாக பரவும் காய்ச்சல் என மருத்துவர்கள் சொல்கின்றனர். இந்த அரசு விழிப்பொடு இருந்து குழந்தைகளை காப்பதுடன், மருத்துவகுழு ஆராய்ந்து இந்த காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.