பினராய் விஜயனுக்கு எதிராக கேரளத்தில் கை கோர்த்த பாஜக காங்கிரஸ்: தலைமை செயலக தீவிபத்தில் கூட்டாக போராட்டம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 26, 2020, 10:20 AM IST
Highlights

தொடர்பான முக்கிய ஆவணங்கள் தீயில் அழிக்கப்பட்டு விட்டதாகவும், திட்டமிட்டு ஆவணங்கள் அழைக்கப் பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியதுடன், காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கூட்டாக தலைமைச் செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கேரளத் தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அம்மாநிலத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தங்கக் கடத்தல் ஆவணங்களை அழிப்பதற்காகவே  இது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சதி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.இதனையடுத்து  அங்கு வந்த போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். கேரள அரசியலில் தங்க கடத்தல் விவகாரம் புழுதியை புயலை கிளப்பியுள்ளது, மாநில முதலமைச்சர் பினராய் விஜயனுக்கும் அதில் தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சியினர் குற்றஞ் சாட்டியுள்ளனர். 

இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள பொது நிர்வாகத் துறை அலுவலகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக நெருப்பு அணைக்கப்பட்டு விட்டதாகவும், அதில் யாருக்கும் எந்த காயமும் இல்லை எனவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் கேரள அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ள 30 கிலோ தங்க கடத்தல் விவகாரம், தொடர்பான முக்கிய ஆவணங்கள் தீயில் அழிக்கப்பட்டு விட்டதாகவும், திட்டமிட்டு ஆவணங்கள் அழைக்கப் பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியதுடன், காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கூட்டாக தலைமைச் செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து போலீசார் கலைக்க முயற்சித்தனர், அப்போதும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். அதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் மற்றும் பாஜகவின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்த, மாநில தலைமைச் செயலாளர் விஷ்வாஸ் மேத்தா தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தீ விபத்தில் எந்த ஆவணங்களும் எரியவில்லை என ஊடகங்களின் முன் விளக்கமளித்தார்.  ஆனால் அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் மற்றும் பாஜக இளைஞரணியினர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதனையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.  தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்களை கோரிக்கை வைத்துள்ளனர்.

 

click me!