
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், 'தமிழகத்தில் திராவிட மாடல் என்பது என்ன என்று திமுக விளக்க வேண்டும். 50, 60 ஆண்டுகளாக திராவிட மாடலில் தான் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் இன்றும் பல கோவில்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. பல கிராமங்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை இது தான் திராவிட மாடலா? ஜாதிக்கொரு சுடுகாடு வைத்து கொள்வது தான் திராவிட மாடலா ?
உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் நரேந்திர மோடி தான். காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மீனவர் படுகொலை நடைபெற்றது. 600 க்கு மேற்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒரு துப்பாக்கி சூடு கூட நடக்கவில்லை. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளது. 2014 க்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலமாக உள்ளது.
தமிழகத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் மின் வெட்டு உள்ளது. பொருளாதாரத்தில் கீழ்நிலையில் சென்றுள்ளது தமிழக அரசு. அதனை மக்கள் தலையில் சுமத்திவிட்டு, மத்திய அரசு மீது பழி போடுவதை ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார். திமுகவின் ஒராண்டு ஆட்சி என்பது எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களுக்கு ஏமாற்றத்தினை மட்டுமே கொடுத்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.
அதைபோல் லாக்கப் டெத் அதிகரித்து வருகின்றது. அதைபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றது உக்ரைன், ரஷ்யா, போர் எதிரொலி காரனமாக தான் சமையல் எரிவாயுவின் விலை, பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்டவை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதைபோல் இந்தியா முழுவதும் கேஸ் மானியனாது கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கேஸ் மானியம் வழங்கப்படும்' என்று கூறினார்.
இதையும் படிங்க : "இந்து சக்தி.. அடிபணிந்த அரசு..!" ஆதீன விவகாரத்தில் மார்தட்டும் ஹெச். ராஜா