கிரேனில் கொண்டுவரப்பட்ட பிரமாண்ட மாலை; உணர்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் நமசிவாயம்

By Velmurugan s  |  First Published Sep 8, 2023, 2:19 PM IST

புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ராட்சத கிரேன் மூலம் 102 அடி உயரத்தில் பிரமாண்ட மாலை அணிவித்து பாஜக அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தொண்டர்கள்.


புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்னேரே பல்வேறு நலத்திட்ட உதவிகளோடு புதுவை முழுவதும் பேனர், கட்டவுட்டுகள், அலங்கார வளைவுகள் வைத்து வெகு விமரிசையாக கொண்டாடத் தொடங்கிவிட்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் பிறந்த நாளான இன்று காலை மணக்குள விநாயகர் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த அமைச்சர் நமச்சிவாயம் அதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஏற்பாட்டில் கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சென்றார். அப்பொழுது அவருக்கு அவரது ஆதரவாளர்கள் ராட்சத கிரேன் இயந்திரத்தைக் கொண்டு 102 அடி மாலை அணிவித்தும், மலர் தூவியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தெறி விஜய் பாணியில் உ.பி. சாமியாருக்கு எச்சரிக்கை விடுத்த மர்ம நபர்கள்; பொள்ளாச்சி அருகே பரபரப்பு

அதனைத் தொடர்ந்து பிறந்தநாள் நடைபெறும் மேடைக்கு வந்த போது அங்கு பள்ளி மாணவிகள் அவரை வாழ்த்தி பாடல் பாடிய பொழுது ஒரு நிமிடம் கலங்கி நன்றி தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவிகள் அவரை கைநீட்டி ஆசீர்வாதம் செய்த போது தலைவணங்கி ஆசி பெற்று மகிழ்ந்தார். தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

click me!