அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம்... மார்ச்.10 அன்று ஆர்ப்பாட்டம் அறிவித்தது பாஜக!!

By Narendran S  |  First Published Mar 6, 2023, 11:32 PM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்த தமிழக அரசை கண்டித்து வரும் 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது. 


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்த தமிழக அரசை கண்டித்து வரும் 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது. முன்னதாக வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவின. இதை அடுத்து வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க: திருமாவளவனின் இந்த செயல் வருத்தமளிக்கிறது... அறிக்கை வெளியிட்ட மதிமுக!!

Tap to resize

Latest Videos

அதில், வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா தமிழக முதல்வர்? என்ற தலைப்பில் திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள் வடமாநிலத்தவர்கள் பற்றி பேசிய பேச்சுக்களை குறிப்பிட்டு இருந்தார். இது வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி அண்ணாமலை மீது அரசுக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல், சாதி, மதம், இனம் தொடர்பாக கலகம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்தியப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது திராவிட மாடல் ஆட்சி... மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

இதை அடுத்து திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி வடமாநிலத்தவர் தொடர்பான பிரச்சனையை திசைதிருப்ப இப்போது என் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இரட்டை வேடங்கள் போடுவது திமுகவினருக்கு இயல்பானது என்று கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்  நடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!