திருமாவளவனின் இந்த செயல் வருத்தமளிக்கிறது... அறிக்கை வெளியிட்ட மதிமுக!!

Published : Mar 06, 2023, 07:35 PM IST
திருமாவளவனின் இந்த செயல் வருத்தமளிக்கிறது... அறிக்கை வெளியிட்ட மதிமுக!!

சுருக்கம்

நேர்காணல் ஒன்றில் வைகோ பெயரை குறிப்பிட்டு எழுப்பப்பட்ட கேள்வியை திருமாவளவன் கடந்து சென்ற விதம் வருத்தம் அளிப்பதாக மதிமுக தெரிவித்துள்ளது. 

நேர்காணல் ஒன்றில் வைகோ பெயரை குறிப்பிட்டு எழுப்பப்பட்ட கேள்வியை திருமாவளவன் கடந்து சென்ற விதம் வருத்தம் அளிப்பதாக மதிமுக தெரிவித்துள்ளது. இதுக்குறித்து மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது. இந்த நேர்காணலில் ஈழப்பிரச்சினை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் இபிஎஸ்.! மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு- விரக்தியில் ஓபிஎஸ்

விடுதலைப் புலிகளை ஆதரித்ததால் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பல இழப்புகளை சந்தித்தவர் வைகோ என்பதை மறுக்க முடியாது. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 577 நாட்கள் வேலூர் வெங்கொடுமை சிறையில் வாடியவர் வைகோ. பொத்தம் பொதுவாக தமிழ்நாட்டு தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்சனையில் அரசியல் செய்தார்கள் என்று திருமா குறிப்பிடுவது வேதனை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவில் விழுந்த அடுத்த விக்கெட்... ஐடி விங் செயலாளர் திடீர் ராஜினாமா!!

இந்த அறிக்கையை அடுத்து நாகர்கோவிலில் செய்தியாளஎர்களை சந்தித்த திருமாவளவன், இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோவின் பங்களிப்பு மகத்தானது. இலங்கை தமிழர் நலனுக்காக வைகோ, பழ.நெடுமாறன், திராவிடர் கழகங்கள் செய்த உதவிகளை எளிதில் கடந்து செல்ல முடியாது. மதிமுக கொடுத்த முழுமையாகப் படித்த பிறகு தெளிவாக விளக்கம் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!