தி.மு.க. கூட்டணியில் எத்தனை கிரிமினல்கள்? எத்தனை பேர் மீது குண்டாஸ்? அண்ணாமலை தோண்டியெடுத்த பகீர் புதையல்..

By Ganesh RamachandranFirst Published Jan 20, 2022, 2:14 PM IST
Highlights

தி.மு..வின் இணையதள அணி தங்களை ஓவராக சீண்டுவதால் தமிழக பா...வின் மாநில தலைவரான அண்ணாமலை ஒரு பக்கா பிளானை ஸ்கெட்ச் பண்ணியிருக்காராம். அண்ணாமலையின் அதிரடி சீக்ரெட் பிளான் இதுதான்...

தி.மு.க.வின் இணையதள அணி தங்களை ஓவராக சீண்டுவதாகவும், இதற்கு பதிலடி தருவதற்காக தமிழக பா.ஜ.க.வின் மாநில தலைவரான அண்ணாமலை ஒரு பக்கா பிளானை ஸ்கெட்ச் பண்ணியிருப்பதாகவும் தகவல்கள் தடதடத்தன. அண்ணாமலையின் அந்த அதிரடி பிளான் என்ன? எனும் சீக்ரெட் இப்போது லீக் ஆகியுள்ளது.

அண்ணாமலையின் அதிரடி பிளான் இதுதான்…

அதாவது, தங்கள் கட்சியின் ஏதோ ஒரு குக்கிராம உறுப்பினர் செய்யும் தவறுகளைக் கூட, மாநில நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் செய்யப்படுவதாக தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி விமர்சனம் கக்கும் நிலையில், அந்த கட்சியிலுள்ள மிக முக்கிய நிர்வாகிகளின் கிரிமினல் ஜாதகங்களை அலசி, மாவட்ட வாரியாக அடித்து தூக்கியிருக்கிறாராம் அண்ணாமலை.

அதன்படி, தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.வினரில் கிரிமினல் ப்ரொஃபைலை வைத்திருப்போரை மட்டும் தனியே லிஸ்ட் போட்டு எடுத்திருக்கிறார். பாலியல் குற்றச்சாட்டு, நிதி மோசடி, சீட்டிங் பிஸ்னஸ், இட ஆக்கிரமிப்பு, சாதி வன்கொடுமை, வன குற்றம் போன்றவற்றில் தி.மு.க.வினர் கணிசமான வழக்குகளை வைத்துள்ளனராம். அதுவும் முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் மட்டுமல்ல, தி.மு.க.வின் முக்கிய முகங்களாக பல மாவட்டங்களில் பார்க்கப்படும் வி.ஐ.பி.க்களின் மேலேயே இந்த மாதிரியான வழக்குகள் எக்கச்சக்கம் இருக்கின்றதாம். அவை அனைத்தையும் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து எடுத்து, தனித்தனி ஃபைலை ரெடி பண்ணிவிட்டாராம் அண்ணாமலை.

ஆளுங்கட்சிக்கு எதிராக இப்படியொரு அதிரடி லிஸ்டை தயாரிப்பதில் மாநில போலீஸ் நிச்சயம் சப்போர்ட் பண்ணாது என்பதால், மத்திய உளவு போலீஸை வைத்துதான் இந்த ப்ராஜெக்ட்டை முழுமையாக முடித்துள்ளார் அண்ணாமலை. அவர் தயாரித்துள்ள லிஸ்டில், தற்போது மக்கள் பிரதிநிதியாக இருக்கும் நபர்களும் உள்ளனர் என்பதுதான் ஷாக்கே.

தி.மு.க. மட்டுமில்லாது, அதன் கூட்டணி கட்சிகளில் இருக்கும் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் ஃபைலையும் தயாரித்துள்ளார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஐம்பது பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவலில் உள்ளது தெரிய வந்துள்ளதாம். ’எதற்கெடுத்தாலும் பாசிச பா.ஜ.க. என்று நம்மை பொய்யாக குற்றம் சாட்டும் திருமா கட்சியின் லட்சணத்தை பாருங்க’ என்று தன் சகாக்களிடம் இதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

இது போக ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என அக்கூட்டணியின் அனைத்து கட்சியிலும் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியஸ்தர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களின் முழு நீள ஃபைல் ரெடி.

பட்டியல் தயாரிப்பு முடிந்ததும், அதை அப்படியே கவர்னரின் கைக்கு சமர்ப்பித்து, இந்த நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசை உத்தரவிட சொல்லி வலியுறுத்துவதே அண்ணாமலையின் மாஸ்டர் பிளானாம்..!

click me!