கோட்சேவை, கோல்வால்கரை கொண்டாடுபவர்கள் தியாகிகளை அவமதிப்பதில் ஆர்சர்யம் இல்லை.. கொதிக்கும் Ex MLA.

By Ezhilarasan BabuFirst Published Jan 20, 2022, 1:06 PM IST
Highlights

தமிழக அரசின் வாகன அணிவகுப்பில் அன்னை வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, பூலித்தேவன், மருது சகோதரர்கள், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரம் சுந்தரலிங்கம், வ.உ.சிதம்பரனார், தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன் படையாச்சி, திருப்பூர் குமரன் உள்ளிட்டவர்களுடன், 1806 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் புரட்சியும் இடம் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

புறக்கணிக்கப்பட்டதியாகிகளுக்குமரியாதை செலுத்துவது என்ற தமிழக அரசின் முடிவு வரவேற்க தக்கது என மஜக பொதுச்செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் மு. அன்சாரி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, தில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் அன்னியர் ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய தமிழக தியாகிகளின் வரலாறு பொறித்த வாகனங்கள் சில புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவை தமிழக அரசின் ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருப்பதை மனித நேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது.

பாராபட்சத்தையே கொள்கையாக கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் இந்த போக்கு, தமிழக தியாகிகளை அவமதிக்கும் செயல் என்பதில் ஐயமில்லை. கோட்சேக்களையும், கோல்வால்க்கர்களையும் கொண்டாடுபவர்களுக்கு உண்மையான தியாகிகள் மீது வெறுப்பு ஏற்படுவதில் ஆச்சர்யம் இல்லை. இந்நிலையில் தமிழக அரசு எந்தெந்த மாநிலங்களின் தியாகிகள் இது போல் புறக்கணிக்கப்பட்டுள்ளார்களோ , அவர்களை எல்லாம் தமிழக அரசின் வாகன அணிவகுப்பில் பங்கு பெற செய்வது குறித்து யோசிக்கலாம். இது தமிழக அரசின் மீதும், தமிழக மக்களின் மீதும் இது போல் பாதிக்கப்பட்ட பிற மாநில மக்கள் பிரியம் கொள்ள வழிவகுக்கும். மேலும் ஒருமைப்பாட்டை வளர்க்கவும் உதவும். அவர்களும் அவரவர் மண்ணில் நமது தியாகிகளை கொண்டாடும் எண்ணங்களையும் உருவாக்கும். 

Latest Videos

எனவே இது குறித்தும் தமிழக அரசு கவனம் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசின் வாகன அணிவகுப்பில் அன்னை வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, பூலித்தேவன், மருது சகோதரர்கள், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரம் சுந்தரலிங்கம், வ.உ.சிதம்பரனார், தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன் படையாச்சி, திருப்பூர் குமரன் உள்ளிட்டவர்களுடன், 1806 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் புரட்சியும் இடம் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.1857 ஆம் ஆண்டு நாடு தழுவிய அளவில் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்னோட்டமாக, தீரன் திப்பு சுல்தானின் மகன்களால்  முன்னெடுக்கப்பட்ட வேலூர் புரட்சி தமிழகத்தின் ரத்தம் தோய்ந்த கம்பீர வரலாறாகும்.

எனவே தமிழக அரசும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் புறக்கணிக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவரையும்  கொண்டாடி மகிழ வேண்டும் என்றும், தமிழக மக்கள் அனைவரும் ஒரணியில் நின்று இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். ஒன்றிய அரசு இனியாவது பாராபட்சத்தை கைவிட்டு,  அனைத்து மாநில சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் சம அளவில் கொண்டாட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!