பாஜக அண்ணாமலை ஆடியோக்கள்; சிக்கும் போலி சிங்கம்... பரபரப்பாக புதிய வீடியொ வெளியீடு..!

By Thiraviaraj RMFirst Published Aug 26, 2021, 12:03 PM IST
Highlights

பாஜக அண்ணாமலை ஆடியோக்கள்; சிக்கும் போலி சிங்கம்... என்கிற தலைப்பில் 40 நிமிட காணொளியை வெளியிட்டுள்ள மதன் ரவிச்சந்திரன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருக்கிறார்.

பாஜக அண்ணாமலை ஆடியோக்கள்; சிக்கும் போலி சிங்கம்... என்கிற தலைப்பில் 40 நிமிட காணொளியை வெளியிட்டுள்ள மதன் ரவிச்சந்திரன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருக்கிறார். 

பாஜக தமிழக செயலாளர் கே.டி.ராகவன் மீது பாலியல் வீடியோ விவகாரத்தை வெளியிட்டு இருந்தார் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன். இதனையடுத்து கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதனையடுத்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இது குறித்து விசாரணை நடத்தப்படும். ஆனால் பாஜக, மதனுக்கும், வெண்பாவுக்கும் பாதுகாப்பு சம்பந்தமாக எந்த உத்தரவாதமும் தராது. அவரவர் செய்த செலுக்கு அவரவர்களே பொறுப்பு என அறிவித்து இருந்தார். இந்நிலையில் பாஜக தலைவர்களின் பாலியல் ரீதியான புகார்களை விசாரிக்க மலர்கொடி தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இதனையடுத்து பாஜகவில் உறுப்பினராக இருந்த மதன் ரவிச்சந்திரனும், வெண்பாவும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மதன் டையரி என்கிற யூடியூப் பக்கமும் முடக்கப்பட்டது. தற்போது மதன், பாஜக தலைவர் அண்ணாமலை மற்றி பற்றிய தகவல்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

அதில், ‘’பல பெண்களின் பெரிய பிரச்னைகளுக்கு அண்ணாமலை காரணமாக இருக்கப்போகிறார். கே.டி.ராகவனின் வீடியோவை அண்ணாமலைதான் வெளியிடச் சொன்னார் என்பதற்கான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இதனை அவர் மறுத்தால் வீடியோ வெளியிடப்படும் என மதன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

click me!