தா.பாண்டியன் மறைவுக்கு பாஜக, தேமுதிக இரங்கல்.. மறைவு செய்தியால் வேதனையின் உச்சத்தில் கேப்டன் விஜயகாந்த்.

Published : Feb 26, 2021, 01:48 PM IST
தா.பாண்டியன் மறைவுக்கு பாஜக, தேமுதிக இரங்கல்.. மறைவு செய்தியால் வேதனையின் உச்சத்தில் கேப்டன் விஜயகாந்த்.

சுருக்கம்

மேலும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் ஆகியோர் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்  விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தா.பாண்டியன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என தேமுதிக தலைவர் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

மேலும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதேபோல் தா. பாண்டியன் அவர்களின் மறைவுக்கு தமிழக  பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:  65 ஆண்டுகால பொது வாழ்க்கையில் உழைத்திட்ட தலைவர் தா.பாண்டியன் அவர்கள் மறைவு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். 

பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், இலக்கியமன்றங்களை அலங்கரித்தவர் என பல்துறை வித்தகராக விளங்கியவர் தா.பாண்டியன் அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கக் கூடியது, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். எனக் கூறியுள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!