#BREAKING நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதா.. சட்டப்பேரவையில் தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்

By vinoth kumarFirst Published Sep 13, 2021, 11:51 AM IST
Highlights

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடக்கிடு தொடரும் வகையில் மசோதா அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தத் தேர்வால் ஏழை, எளிய, கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பது சிரமங்கள் ஏற்படுகிறது. நீட் தேர்வு அச்சத்தால் இதுவரை 14 மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்று தேர்தல் அறிக்கையிலும் ட் திமுக தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நிறைவடைய உள்ள நிலையில், நீர் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பேசிய முதல்வர்;- தொடக்கம் முதலே நீட் நுழைவுத்தேர்வை திமுக எதிர்த்து வருகிறது. திமுக பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடக்கிடு தொடரும் வகையில் மசோதா அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

click me!