தனிக்காட்டு ராஜவா செயல்பட்ட ஆளுநர்.. கடிவாளம் பேட்ட ஸ்டாலின் கவர்மெண்ட்.. பதறியடித்து கடிதம் எழுதிய RN.ரவி.

By Ezhilarasan Babu  |  First Published Aug 20, 2022, 11:07 AM IST

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது என ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளா. மேலும் அது தொடர்பான மசோதாவுக்கு விளக்கமளிக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். 


பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது என ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளா. மேலும் அது தொடர்பான மசோதாவுக்கு விளக்கமளிக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். 

தற்போது வரை தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகிறது. அதில் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் தற்போதுவரை ஆளுனர் வசம் இருந்து வருகிறது. ஆளுநரே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமித்து வருகிறார். இந்நிலையில்  ஆர்.என ரவி ஆளுநராக பொறுப்பேற்றது முதல் மாநில அரசை  கலந்தாலோசிக்காமல் பல்கலைக்கழக விவகாரங்களில் செயல்பட்டு வருகிறார்.

Tap to resize

Latest Videos

அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்கிறார், எனவே இனி மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் என தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமித்து வருவதை மேற்கோள்காட்டி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் டெல்லியில் இருந்து தெலங்கானா ஆந்திரா வரை கிடுக்கிப்பிடிக்கு தயாராகிறதா சிபிஐ? நடுக்கத்தில் அரசியல் புள்ளிகள்!!

இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதல் காத்திருக்கிறது.  ஆனால் இந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுயர் காலம் தாழ்த்தி வருவதுடன், 3 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஆளுநர் நியமித்துள்ளார். முன்னதாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநரை முதல்வர் சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சொற்ப பாக்கியை காரணம் காட்டி நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா? இது மோடி அரசின் அராஜக போக்கு.. கண்டிக்கும் CPIM

இந்நிலையில் பல்கலைக்கழக  துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் மசோதா குறித்து விளக்கம் அளிக்க தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். அதில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநில அரசை நியமிப்பது பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார், துணைவேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்வது அரசியலுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அரசு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதா என்பது, மாநில அரசின் உரிமை தொடர்பானது, கடந்த நான்கு ஆண்டுகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர் ஏதோ தனக்கு மட்டுமே உருமை உள்ளது போல செயல்பட்டு வருகின்றனர், உயர் கல்வி அளிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது, எனவே மாநில அரசின் மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கி உள்ளது என கண்டித்திருந்தார். இந்நிலையில்தான ஆளுநர் அந்த அம்மசோதாவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!