ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் நிறுத்தினால் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஜே.டி.யு தலைவர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
வரும் 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப்போவது யார் என்ற கேள்வி தற்போதே எழுந்துள்ளது. அதுவும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் ஆக மோடி தான் இருப்பார் என்றும், காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி இருப்பார் என்றும் கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க..இடம் மாற போகும் திருப்பதி கோவில்.. 70 லட்சம் வீட்டை கோவிலுக்கு எழுதிக்கொடுத்த தமிழ்நாட்டு பெண் !!
இந்த நிலையில் பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று, இவர் யாருக்கு ஆதரவாக இருப்பார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய நிதிஷ் குமா, பீகார் மாநிலத்தில் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுடன் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார்.கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்ட நிதிஷ் குமாரின் இந்த கணக்கு பாஜகவுக்கு எதிராக எடுத்த மாஸ்டர் பிளான் என்று கூறுகிறார்கள்.
இதையும் படிங்க..BJP Vs DMK : திமுகவுக்கு தைரியம், திராணி இருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடுங்கள்.. தமிழக பாஜக அதிரடி!
2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, நிதிஷ் குமார் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இப்போது இருந்தே நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆட்டத்தை எல்லா கட்சிகளும் தொடங்கியுள்ளது என்பதே தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க..TN Rain Alert : ஜனவரி 3 முதல் 5 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை