பாஜகவுக்கு பெரிய கும்பிடு போட்ட பிக்பாஸ் பிரபலம்... டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் ஐக்கியம்..!

Published : Mar 11, 2021, 10:05 PM IST
பாஜகவுக்கு பெரிய கும்பிடு போட்ட பிக்பாஸ் பிரபலம்... டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் ஐக்கியம்..!

சுருக்கம்

பாஜகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைந்த பிக்பாஸ் பிரபலம் மோகன் வைத்யா, அக்கட்சியிலிருந்து விலகி டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.  

கடந்த ஓராண்டாகவே பாஜகவில் சினிமா பிரபலங்கள் அதிகளவில் இணைந்து வருகிறார்கள். இன்றுகூட நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளதாக அறிவித்தார். சினிமா பிரபலங்கள் பாஜகவுக்கு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பாஜகவில் இணைந்த பிரபலம் ஒருவர் ஓசையில்லாமல் விலகி, டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்து, பாஜகவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, கர்னாடக இசைக் கலைஞரும் பிக்பாஸ் பிரபலமுமான மோகன் வைத்யாதான் அது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மோகன் வைத்யா பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரனை மோகன் வைத்யா இன்று திடீரென சந்தித்தார். பின்னர் அமமுகவில் மோகன் வைத்யா இணைந்தார். இதனையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் மோகன் வைத்யா பிரசாரம் செய்வார் என்றும்  தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவிலிருந்து விலகி அமமுகவில் மோகன் வைத்யா இணைந்தது பாஜக வட்டாரத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!