அற்புத மனிதனின் நாணய அரசியல்... ரஜினியை போற்றி புகழும் பாரதிராஜா..!

By Thiraviaraj RMFirst Published Mar 13, 2020, 12:44 PM IST
Highlights

ரஜினியின் நவீன நாணய அரசியலை வரவேற்பதாக இயக்குநர் பாரதி ராஜா வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.
 

ரஜினியின் நவீன நாணய அரசியலை வரவேற்பதாக இயக்குநர் பாரதி ராஜா வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது. இரு தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார் பாரதி ராஜா. இந்நிலையில் தான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என ரஜினி வெளிப்படையாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பாரதிராஜா. 

இதுகுறித்து பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில், ‘’எனது 40 ஆண்டுகால நட்பு. இன்று இந்த சமூகம், உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன் சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ரஜினி என்ற மந்திரத்தை விட, ரஜினி என்ற மனிதன் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்து இருக்கிறேன். இன்று அந்த மனிதன் வெளிப்படையாக மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது.

தமிழன் தான் ஆட்சிக்கு தலை சிறந்தவன் என்று ரஜினியின் நாற்காலி கொள்கை தமிழனின் வரலாறு ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கு உடைப்பதும், ரஜினி என்ற உயர்ந்த மனிதனுக்கே சாரும். ரஜினியின் அரசியல் கொள்கை அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக சமூக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக அன்று நான் அறிந்தவை இன்று என் தமிழக மக்களுக்கு எதிராக கூட இருக்கலாம்.

ஆருயிர் நண்பன் என்பதை விட சிறந்த மனிதனாக ரஜினியின் நாணய அரசியலில் அதன் முதல் பக்கத்திலேயே ஒரு தமிழனை அரசனாக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவேன் என்ற ஊர் மனிதத்தை கொள்கைகளாக பார்க்காமல் அது ரஜினியாக ஓர் அற்புத மனிதனாக நான் பார்க்கிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.

click me!