நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்போம். திமுக அரசின் 3-ஆண்டுகால ஆட்சி மக்களை ஏமாற்றுக்கூடியதாகதான் இருக்கின்றது. அதிமுகவில் இருக்ககூடிய ஸ்லிப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள்.
அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்த பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் அம்மா மக்கள் முனேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பேட்டியளிக்கையில்;- நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்போம். திமுக அரசின் 3-ஆண்டுகால ஆட்சி மக்களை ஏமாற்றுக்கூடியதாகதான் இருக்கின்றது. அதிமுகவில் இருக்ககூடிய ஸ்லிப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள்.
இதையும் படிங்க;- ஆளுநரை விமர்சிக்க தயங்கும் இபிஎஸ்? சித்தாந்தமே தெரியாது சொல்பவர் தலைமை பொறுப்பிற்கு தகுதியானவரா? KC. பழனிசாமி
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது என்பது ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் மக்கள் தான் ஏற்றுகொள்ள வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை வைத்து எல்லா பலனையும் எடப்பாடி அனுபவித்துவிட்டு தேர்தல் நேரத்தில் பாஜகவிற்கு துரோகம் செய்கிறார். அவருக்கு துரோகம் செய்வது என்பது அவருக்கு இயற்கையான சுபாவம் தான்.
இதையும் படிங்க;- நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா? - அண்ணாமலையின் நக்கல் பதில்
ஏற்கனவே அவரை முதல்வராக்கியவர்களுக்கு துரோகம் செய்தார். இப்பொழுது அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜகவிற்கு துரோகம் செய்துள்ளார் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.