சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது !! கனிமொழிக்கு வழங்கப்பட்டது !!

Published : Dec 14, 2018, 07:27 AM IST
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது !! கனிமொழிக்கு வழங்கப்பட்டது !!

சுருக்கம்

டெல்லியில் நடைபெற்ற விழாவில் திமுக எம்.பி. கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வழங்கினார்.

லோக்மால்ட்என்ற  செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ 2 வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மாநிலங்கள் அவையின் 2018-ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில்   டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் துணைத் தலைவர்  வெங்கைய  நாயுடு கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை வழங்கினார்.

நாடாளுமன்றத்தில் கனிமொழி கடந்த 10 ஆண்டுகளாக மகத்தான வகையில் பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலுசேர்த்ததற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

அவரது நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக உந்து சக்தியாகவும் திகழ்கிறது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்தார்..

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும் புகைப்படத்தை கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு