புகழேந்தியோட ஆசையே வேறங்க! அது கிடைக்காததும் தலைவர் மேலே பாயுறார்: சி.ஆர்.சரஸ்வதி உடைக்கும் ரகசியம்...!!

By Vishnu PriyaFirst Published Sep 21, 2019, 6:05 PM IST
Highlights

‘யார் கட்சியை விட்டுப் போனாலும் கவலை கொள்ள மாட்டேன். ஆனால் புகழேந்தி விலகினால் கவலைப்படுவேன்’ என்று தலைவரே சொல்லியிருக்கிறார். அந்த அன்புதான் அவரை புகழேந்தியை நீக்க விடாமல் தடுத்திருக்கிறது. 

பதினாலு வருஷமா அட்ரஸே இல்லாம இருந்த தினகரனை கொண்டு வந்ததே நான் தான். போராட்டம் அது இதுன்னு பண்ணி தூக்கிவிட்டிருக்கேன்.’சமீபத்தில் கோயமுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற கழகத்தினரிடம் புகழேந்தி, தன் தலைவரை பொளந்து கட்டிய வார்த்தைகள் இவை. அதன் பிறகு அ.ம.மு.க. மீண்டும் ஸீனுக்கு வந்திருக்கிறது.

 

பெரும் பரபரப்பில். அ.தி.மு.க.வில் ஜெயலலிதா கோலோச்சிய காலத்தில் பெரும் புள்ளியாக வலம் வந்தார் பெங்களூருவை சேர்ந்த புகழேந்தி. கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் இவர். சென்சிடீவ் மனிதரான இவரிடம் மிக கவனமாக டீல் செய்வார்கள் அக்கட்சியினர். 
இச்சூழலில் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் சசிகலா, தினகரனின் அணியை தேர்ந்தெடுத்தார் புகழேந்தி. அ.ம.மு.க.வின் பெங்களூரு மாநில செயலாளராக இருக்கும் இவர் சமீபத்தில் இப்படி தினகரனை ஏக வசனத்தில் விமர்சித்திருப்பது வைரலாகி இருக்கிறது. 
கட்சியிலிருந்து கழன்று கொள்ளத்தான் புகழேந்தி இப்படி பேசியிருக்கிறார் என்பது தினகரனுக்கு புரியும். ஆனாலும் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை இதுவரையில். அதேபோல் புகழேந்தியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு அமைதியாகிவிட்டாரே ஒழிய, அதன் பின் ஒரு மூவ்வையும் மேற்கொள்ளாமல்தான் இருக்கிறார். 

 

இந்த சூழலில்  வார்த்தைக்கு வார்த்தை ‘மக்கள் செல்வர்’ என்று தினகரனைப் புகழ்ந்த புகழேந்தி, ஏன் திடீரென பாதை மாறினார்? என்பது இப்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்து நிற்கிறது. இந்த நிலையில் புகழேந்தியின் போக்கு பற்றி, சில ரகசியங்களை உடைத்துப் பேசியிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைபரப்புச் செயலாளரான சி.ஆர்.சரஸ்வதி “புகழேந்தியிடம் தினகரனுக்கு நிறைந்த நட்பு இருக்கிறது. ‘யார் கட்சியை விட்டுப் போனாலும் கவலை கொள்ள மாட்டேன். ஆனால் புகழேந்தி விலகினால் கவலைப்படுவேன்’ என்று தலைவரே சொல்லியிருக்கிறார். அந்த அன்புதான் அவரை புகழேந்தியை நீக்க விடாமல் தடுத்திருக்கிறது.

 
 

ஆனாலும் புகழேந்தி பேசிய வார்த்தைகள் எங்கள் எல்லோருக்கும் மன வருத்தத்தை தருகிறது. ஆக்சுவலா அவர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தில்தான் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். 
கொள்கை  பரப்புச் செயலாளர் பதவிக்கு என் பெயரை டிக் செய்தது சசிகலாதான். ஆனால் இவர் அதற்கு வருத்தப்பட்டுக் கொண்டு தலைமையை பற்றி தவறாக பேசுவதெல்லாம் அபத்தம். என்ன மன வருத்தமிருந்தாலும் அதை தினகரனிடம் சொல்லி சரி பண்ணிக்கொள்ளலாம். கழகத்தில் எத்தனையோ பதவிகள் உள்ளன. அவற்றை கேட்டுப் பெற வேண்டிதானே, அதைவிடுத்து இப்படியா பேசுறது?” என்றிருக்கிறார். என்னவோ போங்கப்பா நீங்களும், உங்க கட்சியும், உங்க பஞ்சாயத்துகளும். 
-    
 

click me!