பெல்லண்டூர் ஏரி மீட்பு !! ராஜீவ் சந்திரசேகர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி …. உச்சநீதிமன்றம் அதிரடி ….

By Selvanayagam PFirst Published Mar 5, 2019, 8:32 PM IST
Highlights

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திர சேகர் தலைமையிலான நம்ம பெங்களூரு அறக்கட்டளையின் முயற்சியால் பெல்லண்டூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரை அடுத்த பெல்லண்டூர் ஏரி கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்து. என்ஜிடி என்ற நிறுவனம் ஆக்கிரமித்துள்ள இந்த ஏரியை மீட்க வேண்டும் என வலியுறுத்தி நம்ம பெங்களூரு ஃபவுண்டேசன்  என்ற அமைப்பு பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் உதவியுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது..

இதனை விசாரித்த நீதிமன்றம் என்ஜிடி என்ற நிறுவனத்துக்கு அபராதம் விதித்ததுடன் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏரி ஆக்கிரமிப்புக்கு உதவி செய்த அரசியல்வாதிகளுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தது.

நம்ம பெங்களூரு அறக்கட்டளைக்கு கிடைத்த இந்த வெற்றியை ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் இந்த வழக்கில் பணமும்,  அதிகாரமும் தோற்றுப் போயிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பைபிளில் உள்ள தாவீதுக்கும், கோலியாத்துக்கும் நடந்த சண்டையை ஒப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பண பலம்  படைத்த 7க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் களம் இறங்கியிருந்தாலும் சிறுவனான தாவீது வெற்றி பெற்றதைப் போல் நம்ம பெங்களூரு அறக்கட்டளை வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

click me!