40 தொகுதிகளிலும் குக்கர் தான்... விசிலடிக்கும் டிடிவி தினகரன்...!

Published : Mar 05, 2019, 06:14 PM ISTUpdated : Mar 05, 2019, 06:16 PM IST
40 தொகுதிகளிலும் குக்கர் தான்... விசிலடிக்கும் டிடிவி தினகரன்...!

சுருக்கம்

மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், குமரி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இரட்டை இலை சின்னம் கிடைக்காதது எங்களுக்கு பின்னடைவு அல்ல. தேர்தலில் சின்னம் என்பது ஒரு பொருட்டே அல்ல. 

தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இதன் மூலம் மக்கள் எங்கள் பக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. அம்மாவின் பெரும்பாலான தொண்டர்களும் எங்கள் கட்சியில் தான் உள்ளனர். ஆர்.கே. நகரில் வெற்றி பெற்ற குக்கர் சின்னம் தமிழகம் முழுவதும் விசிலடிக்கும். மக்கள் மிகவும் விழிப்புடன் உள்ளனர். 

அதேபோல மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் சின்னத்துக்கு முக்கியத்துவம் இருக்கப்போவதில்லை என்று டிடிவி தினகரன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!