
முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரசாத் கன்னத்தில் அறைந்தால் 1 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என பீகார் மாநில பாஜக பிரமுகர் ஒருவர் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். இவர், நிதிஷ் குமார் மந்திரிசபையில் அமைச்சராக இருந்தார்..
இவர், பாஜக வைச் சேர்ந்த துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடிக்கு அண்மையில் மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்..
அதில் சுசில் குமார் மோடியின் மகன் திருமணம் டிசம்பர் 3–ந் தேதி நடக்கும்போது, சுசில் குமார் மோடியின் வீடு புகுந்து அவரை அடிப்போம்’ என்று தெரிவித்திருந்தார், இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடியாக, பாட்னா மாவட்ட பாஜக ஊடக பொறுப்பாளர் அனில் சானி, தேஜ் பிரதாப் யாதவை கன்னத்தில் அறைபவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் மன்னிப்பு கேட்கக்கோரி, அவரது வீடு முன்பு போராட்டம் நடத்துவோம்’ என்றும் தெரிவித்திருந்தார்..
அனில் சானியின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பாஜக தெரிவித்துள்ளது.