அம்மா விஷயத்தில் கடுப்பான பிரகாஷ்ராஜ்! கந்துவட்டி அன்புவை உத்தமராக்கிய சீனுராமசாமி: ஏஸியாநெட் ஜெட் நியூஸ்...

Asianet News Tamil  
Published : Nov 24, 2017, 06:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
அம்மா விஷயத்தில் கடுப்பான பிரகாஷ்ராஜ்! கந்துவட்டி அன்புவை உத்தமராக்கிய சீனுராமசாமி: ஏஸியாநெட் ஜெட் நியூஸ்...

சுருக்கம்

Asianet today news bits

மாலை கடந்து முன் இரவுக்குள் நுழைய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்! இதமான சூட்டுடன் வெஜ் க்ளியர் சூப்பை உறிஞ்சியவாறு, கொண்டக்கடலை சுண்டலுடன், சில விறுவிறு செய்திகள் உங்கள் ஏஸியாநெட் தமிழ் இணையதளத்தில் இருந்து...
*    அரசியல் நோக்கம் உள்ள எந்த நிகழ்ச்சிக்கும் மாணவர்களை அழைத்துச் செல்ல அனுமதி இல்லை. வகுப்புகள், தேர்வு பாதிக்கும் நாட்களில் மாணவர்கள் பொது நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி இல்லை.
-    தமிழக அரசு 

*    பொது நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்பு தொடர்பாக தமிழக அரசு விதித்துள்ள 55 கட்டளைகளில் வெறும் ஐந்து கட்டளைகளையாவது அவர்கள் மதித்தால் கூட இந்த அரசை நாங்கள் மன்னிக்கிறோம். 
- இணையதள தி.மு.க.

*    சபரிமலைக்கு வரும் புல்மேடு வழியே வரும் பக்தர்கள் பாண்டித்தாவளம் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை அறிந்து செயல்படுங்கள். அதிக நேரம் காட்டில் இருக்காதீர்கள், புல்மேட்டில் போட்டோ எடுக்க அனுமதி இல்லை.
-    சபரிமலை தேவசம்போர்டு.

*    அரசுக்கு எதிராக பேசினால் என் தாய் மற்றும் மதம் பற்றி பேசுகின்றனர். நிஜவாழ்க்கையிலும் என்னை வில்லனாகவே பார்க்கின்றனர். 
- நடிகர் பிரகாஷ் ராஜ்.

*    பிரகாஷ்ராஜை மரியாதை குறைவாய் விமர்சிக்கவில்லை. தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்யவில்லை. திரைப்படங்களில் வாய்ப்பு குறைவாக உள்ளதால் சர்ச்சையாக பேசுகிறார் பிரகாஷ்.
-    மைசூரு பா.ஜ. எம்.பி. பிரதாப் சிம்ஹா.

*    செயலற்று கிடக்கும் நிர்வாக சீர்கேட்டால் அடிப்படை தேவைகளை கூட பெற முடியாமல் தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள். ஜனநாயக முறையில் இந்த அரசை அகற்றி, ஆட்சி மாற்றம் காண வியூகம் வகுப்போம்!
-    தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்.

*    தமிழகத்தில் வேறு எந்த கட்சியுடனும் பா.ஜ.க.வால் கூட்டணி வைக்க முடியாது. அ.தி.மு.க. மட்டுமே அதற்கு விதி, விதிவிலக்கு. இதனாலேயே இரட்டை இலையை அந்த அணிக்கு ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
-    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

*    கட்சியை உடைத்துவிடலாம், ஆட்சியை பிடித்துவிடலாம் என சிலர் நினைத்தனர். அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுப்பது போல் தேர்தல்  கமிஷன் தீர்ப்பு வந்துள்ளது.
-    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
*    பா.ஜ.க. ஆட்சியில் கல்விக்கடன் மறுக்கப்படுகிறது. அரசும் கண்டு கொள்வதில்லை. இதனால் முதல் தலைமுறை பட்டதாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
-    மாஜி நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

*    எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்று இன்றைய ஹீரோக்கள் இல்லை. அன்புச்செழியன் போன்ற உத்தமர்களை தவறாக சித்தரிப்பது வேதனையளிக்கிறது. 
-    இயக்குநர் சீனு ராமசாமி. 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!