
தமிழக சட்டப் பேரவையில இன்று உரை நிகழ்த்திய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காவேரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார் அப்போது ,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கோதாவரி உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பிவிடுவது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர், முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு தற்போத செயல்படத்தி வரும் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.அதன்படி கறவை பசு, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் நாகை - கன்னியாகுமரி வரையிலான சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினையில், சட்ட உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று உறுதியுடன் தெரிவித்தார்.
2016 -17ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.2,478 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஆளுநர், இழப்பீடு வாங்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். மேலும் நீராபானம் விற்பனை, தென்னை விவசாயிகளுக்கு மிகப்பெரிய பயனளிக்கிறது என்பதால் அதனை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.