தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்.. எங்கிருந்து வந்தது இவ்வளவு ஆணவம்.. எச்சரிக்கும் ஸ்டாலின்..!

Published : Sep 22, 2020, 01:28 PM ISTUpdated : Sep 22, 2020, 01:30 PM IST
தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்.. எங்கிருந்து வந்தது இவ்வளவு ஆணவம்.. எச்சரிக்கும் ஸ்டாலின்..!

சுருக்கம்

தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பாஜக அரசின் பின்புலம் இதற்குக் காரணமா? எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பாஜக அரசின் பின்புலம் இதற்குக் காரணமா? எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி, கடைசியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பாலசுப்பிரமணியன். இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு வங்கிக் கடன் கேட்டுச் சென்றுள்ளார்.

அப்போது, வங்கியின் கிளை மேலாளரிடம் பாலசுப்பிரமணியன் பேசியுள்ளார். அப்போது, "உனக்கு இந்தி தெரியுமா?" என வடமாநிலத்தைச் சேர்ந்த அந்த வங்கி மேலாளர் கேட்டுள்ளார். அதற்கு தனக்கு ஆங்கிலம் தெரியும் எனக் கூறியதால், பாலசுப்பிரமணியத்திற்கு வங்கிக் கடன் வழங்க வங்கி மேலாளர் மறுத்துவிட்டதாகப் கூறினார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இது தொடர்பாக திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முகநூல் பக்கத்தில்: ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வுபெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்றபோது, இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது' என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி!

இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பாஜக அரசின் பின்புலம் இதற்குக் காரணமா? எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்! சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை!" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!