தயாராகிறது  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை... தமிழக காவல் துறை சோதனை

First Published Feb 14, 2017, 2:17 PM IST
Highlights


மறைந்த ஜெயலலிதாவிற்கு,  பின்னர்  சசிகலா  அதிமுக   பொதுச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்டு,  பின்பு  முதல்வராகும்  வாய்ப்பு  வரும் போது,  அவர் மீதான  சொத்து  குவிப்பு  வழக்கு  தலை  எடுக்க  தொடங்கியது. இதனிடையே அதிமுக  கட்சி இரண்டு  அணிகளாக   பிரிந்தது . ஒன்று  சசிகலா  தலைமையிலும்,  மற்றொரு  அணி  பன்னீர்  தலைமையிலும்  உள்ளது.    

அதே  72 நாட்கள் :  

இந்நிலையில்,  சசிகலாவிற்கு   எதிராக  உச்ச  நீதிமன்றம்   தற்போது தீர்ப்பு  வளங்கியது.  தீர்ப்பு வழங்கிய இந்த நாள், ஜெயலலிதா  இறந்து  சரியாக  72  ஆவது   நாளான  இன்று  என்பது  குறிபிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சசிகலா  உள்ளிட்ட  3    நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

தமிழக  போலீசார் சோதனை :

இந்நிலையில்,  எந்த  நேரத்திலும், சசிகலா  உள்ளிட்டோரை கைது   செய்து, பெங்களூரு நீதிமன்றத்தில்  ஆஜர்  செய்ய  உள்ளதால், இதற்கு முன்னதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை  தமிழக காவல் துறையினர் தற்போது  சோதனை  செய்து வருகின்றனர்.

கர்நாடக எல்லையில் சசிகலா உள்ளிட்ட மூவரையும் தமிழக காவல் துறையினர் ஒப்படைப்பார்கள் பிறகு பெங்களூரு  காவல் துறையினர் , அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைக்கப்பட உள்ளதாக  பெங்களூரு நகர காவல் துறை அதிகாரிகள் தகவல்  தெரிவித்துள்ளனர்  என்பது குறிபிடத்தக்கது.

கூவத்தூரில்  போலீசார்  குவிப்பு :

இந்நிலையில்,  சசிகலா உள்ளிட்ட 3 பேரை  கைது செய்ய,  கூவத்தூரில்  பெரும்பாலான  போலீசார்  குவிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

click me!