காபி குடிக்க அழைத்துச் சென்று கட்சியில் சேர்த்து கொண்டார்கள்..!! குமுறிக் குமுறி அழுத காங்கிரஸ் கவுன்சிலர்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 6, 2019, 12:45 PM IST
Highlights

தன்னை காபி குடிக்கலாம் வா என்று  அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அங்கு தன்னை கட்டாயபடுத்தி பாஜகவில் இணைய செய்ததாகவும் வசந்தகுமார் அதிரடியாக தெரிவித்துள்ளார் .  

காபி குடிக்க கூட்டிச்சென்று கட்சியில் சேர்த்துவிட்டார்கள் என பாஜகவில் இணைந்த  இரண்டு நாளில் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுத்துள்ள பேட்டியால் கர்நாடகாவில்  பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர் வசந்தகுமார் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியுள்ளார். 

 கடந்த 3 தேதி பெங்களூர் மாநகராட்சி உறுப்பினர் வசந்தகுமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில்  பாஜகவில் இணைந்தார் இது பெங்களூரு காங்கிரஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வசந்தகுமார் தான் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிவிட்டதாக கூறினார் .  தன்னை பாஜக தலைவர்கள் தன்னை காபி குடிக்கலாம் வா என்று  அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அங்கு தன்னை கட்டாயபடுத்தி பாஜகவில் இணைய செய்ததாகவும் வசந்தகுமார் அதிரடியாக தெரிவித்துள்ளார் .  கட்டாயப்படுத்தியதால் மட்டுமே பாஜகவில் இணைந்த தாக தெரிவித்தார். 

எப்போதும்  தன் உடம்பில் காங்கிரஸ் ரத்தம்தான் ஓடுகிறது என தெரிவித்தார்.  அப்போது உடனிருந்த மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பாஜக எந்த அளவுக்கு கீழ்த்தரமாக அரசியல் செய்கிறது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி எனக் கூறினார்.   காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பாஜகவில் இணைந்த இரண்டு நாட்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!