போதும் நீங்க பிரச்சாரம் செய்தது !! நாளையோட நிறுத்திக்கணும்… மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி !!

By Selvanayagam PFirst Published May 15, 2019, 9:45 PM IST
Highlights

மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் நாளையுடன் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 

7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலில் வரும் 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 9 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அன்றைய தினத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றிரவு கொல்கத்தா நகரில் நடந்த பாஜக ட்ய்ஹலைவர்  அமித் ஷா பேரணியின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, அம்மாநிலத்தை சேர்ந்த சீர்திருத்தவாதி ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல், மா.கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இவ்விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை என மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் கமிஷனை குறை சொல்கின்றன.

இந்நிலையில் இந்த 9 தொகுதிகளிலும் வரும் வெள்ளிக்கிழமையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருவதால் ஒருநாள் முன்னதாகவே பிரசாரத்தை நிறுத்துமாறு அம்மாநில தேர்தல் கமிஷன் இன்றிரவு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்காளம் மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘டம் டம், பரசட், பசிர்ஹட், ஜெய்நகர், மதுராப்பூர், ஜாதவ்பூர், டைமன்ட் ஹார்பர், தெற்கு கொல்கத்தா, வடக்கு கொல்கத்தா ஆகிய 9 தொகுதிகளிலும் நாளை இரவு 10 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும்வரை யாரும் பிரசாரத்தில் ஈடுபட கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின்படி 324-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறை என தேர்தல் ஆணையம் அறிவித்துளளது..

click me!