பீட்டாவுக்கு தடை - உயர்நீதிமன்றம் வழக்குப்பதிவு

 
Published : Jan 24, 2017, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
பீட்டாவுக்கு தடை - உயர்நீதிமன்றம் வழக்குப்பதிவு

சுருக்கம்

அந்நிய நாட்டில் நிதிபெற்று தமிழக கலாச்சாரம் , பண்பாட்டுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு தாக்கல் செய்யப்பட்ட பொதுநலவழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இதனுடன் சுனா.சாமி, ராதாராஜன் பேச்சுக்கு நடவடிக்கையும் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் பீட்டாவை தடை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிகட்டுவுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோஷம் வலுவாக எழுப்பப்பட்டது.

பீட்டா அமைப்பு தமிழகத்தின் பிரபலங்களை பயன்படுத்தி  ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரச்சரம் செய்து வழக்கு போட்டு தடியும் பெற்றது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளனர். பீட்டா அமைப்பினர் விலங்குகள் நல வாஅரியத்தில் கொள்ளைபுற வழியாக நுழைந்துள்ளனர். 

இந்நிலையில், பீட்டாவை தடை செய்யும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், வெளிநாட்டில் இருந்து நிதி பெற்று இந்திய இறையாண்மைக்கும், கலாச்சாரத்திற்கும் எதிராக பீட்டா செயல்படுகிறது.

 மேலும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக பேசும் சுப்பிரமணிய சாமி, ராதாராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் சூர்ய பிரகாசம், நீதிபதி மகாதேவன் முன் முறையிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, நாளை விசாரிப்பதாக தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு