
சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலெப்மென்ட், மீடோ அக்ரோ பார்ம்ஸ் லிமிடெட், ரிவர்வே அக்ரோ பிராடக்ட் பிரைவவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைஸ் மற்றும் தோஹா கெமிக்கல்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களின் பெயரில் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு அந்த சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.
அந்தத் தீர்ப்பின்படி, 6 நிறுவனங்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அந்த கம்பெனிகளின் மேல் முறையீட்டை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.