பஜாஜ் நிதிநிறுவனம் அதிகவட்டி.. வாடிக்கையாளர்கள் முற்றுகை..குப்பை தொட்டியில் ரிசர்வ் வங்கி உத்தரவு.!!

By T BalamurukanFirst Published Jun 10, 2020, 8:26 PM IST
Highlights

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தவணைக்கு அதிக வட்டி வசூல் செய்வதாக வாடிக்கையாளர்கள் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 

 பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தவணைக்கு அதிக வட்டி வசூல் செய்வதாக வாடிக்கையாளர்கள் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம். கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவில்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் பலரும் வீட்டு உபயோக பொருள்கள், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் வாங்கவும், சொந்த தேவைக்காக கடன் பெற்றுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மாத தவணை செலுத்த ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கையொட்டி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை கடைபிடிக்காமல் மாதத்தவணை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அபராதம் விதிப்பதாக சொல்லப்படுகிறது.

 மாதத்தவணையை செலுத்துவதற்காக வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வழங்கியிருக்கும் காசோலையை பஜாஜ் நிர்வாகம் வங்கியில் செலுத்தி பணம் எடுக்க முயற்சிப்பதாகவும், காசோலையில் பணம் இல்லாதபட்சத்தில் அதற்கு தனியாக வங்கியில் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிகிறது. சிலருக்கு சிவில் ஸ்கேரும் குறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அலுவலகத்தின் தரையில் அமர்ந்து பஜாஜ் நிறுவனத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவல் கிடைத்தும் கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து இரு தரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தினர். வரும் 12ந்தேதிக்குள் (வெள்ளி) வாடிக்கையாளர்களுக்கு பிரச்சினை சரி செய்யப்படும் என்று பஜாஜ் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். 
 

click me!