"உங்களுக்கான தீனி செப்டம்பர் 5ற்கு பிறகு கிடைக்கும்" அழகிரியின் அதிரடி பதில்!

Published : Aug 24, 2018, 01:57 PM ISTUpdated : Sep 09, 2018, 08:05 PM IST
"உங்களுக்கான தீனி செப்டம்பர் 5ற்கு பிறகு கிடைக்கும்" அழகிரியின் அதிரடி பதில்!

சுருக்கம்

தொண்டர்களின் எமுச்சி நிறைவாக உள்ளது என மதுரையில் முக அழகிரி பேட்டி  

மு.க.அழகிரி ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்று வருகிறது.


தி.மு.க. தலைவர் கருனாநிதி  மறைவினை தொடர்ந்து செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் அமைதி பேரணி நடத்தப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை மதுரை சத்ய சாயி நகரில் உள்ள் அழகிரியின் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான முன்னாள் மேயர் பி.எம்.மன்னன், முன்னாள் எம்.எல் ஏ., கவுஸ் பாட்சா, திர்வாகிகள் இசக்கிமுத்து, எம்.எல்.ராஜ், உள்ளிட்ட மதுரை, நெல்லை, விருதுநகர், சிவகெங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த அழகிரியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


பின்பு செய்தியாளர்களை சந்தித்த அழகிரி


இன்று தொண்டர்களின் எழுச்சி நிறைவாக இருந்தது.


இந்த எழுச்சியின் மூலமாக நீங்களே தெரிந்து கொள்வீர்கள் ஒரு லட்சத்திற்க்கும் மேலான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்


உங்களுக்கான தீனி செப்டம்பர் 5ற்கு பிறகு கிடைக்கும் என்றார்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!