கலைஞர் நினைவிடத்தில் பஜனைப் பாடல்! எ.வ.வேலுவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்!

By vinoth kumarFirst Published Aug 24, 2018, 11:43 AM IST
Highlights

கலைஞர் நினைவிடத்திற்கு சென்று அவரது புகழை இசையுடன் எ.வ.வேலு பாடியது பஜனைப் பாடல் என்று தகவல் பரவியதால் ஸ்டாலின் மிக கடுமையாக கோபம் அடைந்துள்ளார். கடந்த செவ்வாயன்று திருவண்ணாமலை மாவட்ட தி.மு.கவினர் சுமார் 1000 பேருடன் எ.வ.வேலு கலைஞர் நினைவிடத்திற்கு ஊர்வலமாக வந்தார்.

கலைஞர் நினைவிடத்திற்கு சென்று அவரது புகழை இசையுடன் எ.வ.வேலு பாடியது பஜனைப் பாடல் என்று தகவல் பரவியதால் ஸ்டாலின் மிக கடுமையாக கோபம் அடைந்துள்ளார். கடந்த செவ்வாயன்று திருவண்ணாமலை மாவட்ட தி.மு.கவினர் சுமார் 1000 பேருடன் எ.வ.வேலு கலைஞர் நினைவிடத்திற்கு ஊர்வலமாக வந்தார். பின்னர் கலைஞர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கூடி நின்று கொண்டு தானே எழுதிக் கொண்டு வந்த கலைஞரின் புகழை கூறும் பாடலை இசையுடன் எ.வ.வேலு உள்ளிட்டோர் பாட ஆரம்பித்தனர். அப்போது இசைக்கருவிகள் சிலவற்றையும் எ.வ.வேலு பயன்படுத்த அந்த இடமே உற்சாகமானது.

ஒரு கட்டத்தில் மிகவும் உற்சாகம் அடைந்த எ.வ.வேலு பாடல் பாடிக் கொண்ட ஆட ஆரம்பித்துவிட்டார். அவருடன் சேர்ந்து தி.மு.க தொண்டர்களும் ஆட அதுஅஞ்சலி நிகழ்ச்சியா இல்லை உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சியா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் பரவசம் ஆனார்கள். ஆனால் அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அ.தி.மு.க மற்றும் ரஜினி ரசிகர்கள் சிலர் குத்துப்பாடலுடன் இணைத்து எ.வ.வேலு நடனம் ஆடுவது போல் சமூக வலைதளங்களில் பதிவேற்றவிட்டனர். அதிலும் புளிப்பா புளியங்கா எனும் பாடலுடன் ரீமிக்ஸ் செய்யப்பட்ட எ.வ வேலு நடனம் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப்பில் செம்மையாக வைரல் ஆகிவிட்டது. மேலும் சில பஜனைப்பாடல்களையும் எ.வ.வேலு ஆட்டத்துடன் சேர்த்து சிலர் வைரல் ஆக்கினர். இதனால் உண்மையான பாடல் எது, பொய்யான பாடல் எது என்று கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 

 பகுத்தறிவாளரான கலைஞர் நினைவிடத்தில் சென்று தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எ.வ.வேலு பஜனைப்பாடல் பாடிவிட்டதாகவும் தகவல்கள் பரவின. இதனால் தி.மு.க.விற்கு எதிராக சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்த விவரங்கள் எல்லாம் தி.மு.க ஐ.டி டீமுக்கு செல்ல அவர்கள் உடனடியாக களம் இறங்கினர். குத்துப்பாடலுடன் சேர்த்து எ.வ.வேலு நடனம் ரீமிக்ஸ் செய்யப்பட்ட வீடியோக்களை எல்லாம் யூட்யூப் மற்றும் பேஸ்புக்கில் இருந்து அவர்கள் அகற்ற வைத்தனர்.  ஆனால் தி.மு.க ஐ.டி விங்க் வீடியோக்களை அகற்ற அகற்ற புதிய புதிய பாடல்களுடன் எ.வ.வேலு டான்ஸ் பதிவேற்றப்பட்டு வைரல் ஆகிக் கொண்டே சென்றது.

இதனால் ஒரு கட்டத்தில் தி.மு.க ஐ.டி விங்கே டயர்டாகிப்போனது. மேலும் கலைஞர் மறைவைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தி.மு.க மீது ஏற்பட்டிருந்த ஒரு அனுதாபம் அப்படியே காமெடியாகிப்போனது. இதற்கு எ.வ.வேலு தான் காரணம் என ஸ்டாலினிடம் சிலர் கொளுத்திப் போட்டுள்ளனர். இதனால்எ.வ.வேலுவிடம் ஸ்டாலின் நேரடியாகவே கோபப்பட்டதாக சொல்கிறார்கள். மூத்த நிர்வாகியான நீங்களே இப்படி இருந்தால் எப்படி? தி.மு.கவின் இமேஜை சமூக வலைதளங்களில் செரி செய்ய அவ்வளவு போராடுகிறோம், ஆனால் ஒருத்தன் என்னடானா? பிரியானிக்கு சண்டை போட்டு நம்மை டேமேஜ் பண்றான். 

நீங்க என்னடானா கலைஞர் நினைவிடத்தில போய் டான்ஸ் ஆடுறீங்கனு ரொம்ப கோவமா பேசியிருக்கார். அதுக்கு தான் பாரம்பரிய முறைப்படி இசை அமைத்து கலைஞருக்கு புகழ் அஞ்சலியை மட்டுமே செலுத்தியதாகவும் அதனை சிலர் எதிர்மறை பிரச்சாரமாக்கிவிட்டதாகவும் வேலு வேதனையை தெரிவித்துள்ளார். அதற்கு எல்லாம் நாம் கொடுக்கும் இடம் தான் என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து ஸ்டாலின் சென்றுள்ளார். இதனால் எ.வ.வேலுவும் செம அப்செட்டாகியுள்ளாராம்.

click me!