ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி..? ஆடிப்போன போலீஸார்..!

Published : Jan 27, 2020, 12:13 PM ISTUpdated : Jan 27, 2020, 12:32 PM IST
ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி..? ஆடிப்போன போலீஸார்..!

சுருக்கம்

‘துக்ளக்’பத்திரிகை ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்த நபர்களுக்கு போலீஸார் வலைவீசி வருகின்றனர்.   

‘துக்ளக்’பத்திரிகை ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்த நபர்களுக்கு போலீஸார் வலைவீசி வருகின்றனர். 

பாஜக ஆதரவாளரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவருமான குருமூர்த்தி சென்னை, மயிலாப்பூர், தியாகராஜபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் குருமூர்த்தி வீடு உள்ள தெருவில் 3 பைக்குகளில் 6 பேர் சந்தேகத்துக்குரிய வகையில் வந்துள்ளனர். குருமூர்த்தி வீட்டில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் மணிகண்டன் இதை கவனித்துள்ளார். அப்போது, பைக்கில் வந்தவர்களில் ஒருவர் மஞ்சள் பையில் இருந்து பெட்ரோல் குண்டை எடுத்து வீச முயன்றுள்ளார். இதைப் பார்த்த காவலர் மணிகண்டன் அவர்களைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீஸார் வழக்குபதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். பாஜக பிரமுகர்களும், ஆதரவாளர்களும் தங்களுக்கு ஆபத்து உள்ளதாக கூறி இசட் ப்ளஸ் பாதுகாப்பு கேட்டு வரும் நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.  

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!