பிரதமர் மோடிக்கு ஒலிம்பிக், பாராலிம்பிக் வீரர்கள் வழக்கிய பரிசு பொருட்கள் ஏலம்.. கங்கையை தூய்மைப்படுத்த நிதி.

By Ezhilarasan BabuFirst Published Sep 18, 2021, 11:44 AM IST
Highlights

அதில் மொத்தம் 1300 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் ஜப்பானில் நடந்துமுடிந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் இந்திய விளையாட்டு வீரர்கள் பல பதக்கங்களை குவித்தனர். 

பிரதமர் மோடியின் பிறந்த தினத்தையொட்டி  கடந்த ஓராண்டில் அவர் பெற்ற பரிசுகள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மோடிக்கு வழங்கிய பரிசுகள் நேற்று ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி 71 ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் பாஜக தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டில் அவர் பெற்ற நினைவு பரிசுகள், பட்டு அங்கவஸ்திரங்கள், கலை ஓவியங்கள், கோவில் சிற்ப மாதிரகள், அயோத்தி ராமர் கோயில் மாதிரி, சர்தாம் ருத்ராக்ஷா மாநாட்டு மையம் மாதிரி மற்றும்  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் பிரதமருக்கு வழங்கிய பரிசு பொருட்கள் மின்னணு முறையில் ஏலத்தில் விட இந்திய கலாச்சார துறை அமைச்சகம் முடிவு செய்ததின் அடிப்படையில் நேற்று ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மொத்தம் 1300 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் ஜப்பானில் நடந்துமுடிந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் இந்திய விளையாட்டு வீரர்கள் பல பதக்கங்களை குவித்தனர். நாடு திரும்பி அவர்கள் பிரதமர் மோடியை  சந்தித்தபோது அவர்கள் போட்டியில் உபயோகித்த விளையாட்டு உபகரணங்களை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினர். அந்த வகையில் அந்த பொருட்களும் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் டோக்கியோ பாராலிம்பிக் பாட்மிட்டனில் தங்கம் வென்ற கிருஷ்ணா  நாகர் பயன்படுத்திய ராக்கெட் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற சுகால் யெதிராஜன் பயன்படுத்திய ராக்கெட் ஆகியவை 10 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் ஈட்டி 1.20 கோடிக்கு ஏலம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வாள் வீச்சில் கலந்துகொண்டு வீராங்கணை சி.ஏ பவானிதேவி பயன்படுத்திய வாளின் ஏல மதிப்பு குறைந்தபட்ச விலை 60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஆனால் 10 கோடி வரை அதற்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா பயன்படுத்திய போர்கோஹெய்ன் கையுறை 1.80 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற  மணிஷ் நர்வால் பயன்படுத்திய கண்ணாடி 95. 94 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு ஏலம் மூலம் கிடைக்கும் வருவாயை கங்கை நதியை  பாதுகாக்கும் மற்றும் தூய்மைப்படுத்தும் நமாமி கங்கை திட்டத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்திய பிரதமரானது முதல் ஏற்கனவே இரண்டு முறை  ஏலம் விடப்பட்டது அதில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 15.11கோடி ரூபாய் கிடைத்தது. 

அந்த வகையில் இந்த ஆண்டு குறைந்தது 10 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமருக்கு வழங்கிய அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி வடிவம், மற்றொரு சுற்றுலாத் துறை அமைச்சர் சத் பால் மகாராஜா வழங்கிய சதாமின் மாதிரி ஆகியவையும் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள விருக்கும் நபர்கள் அல்லது அமைப்புகள் https://pmmementos.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் ( செப்டம்பர் 17 ) முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை பங்கேற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!