ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயற்சி.. இணையதளம் முடக்கம் எப்போது சரியாகும்? அமைச்சர் தகவல்.!

Published : Jun 07, 2021, 03:07 PM IST
ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயற்சி.. இணையதளம் முடக்கம் எப்போது சரியாகும்? அமைச்சர் தகவல்.!

சுருக்கம்

இ-பதிவு இணையதளத்தை 60 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அணுகியதால் இணையதளம் முடங்கியது. இன்று மாலைக்குள் இ-பதிவு இணையதளம் சரி செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

 இ-பதிவு இணையதளத்தை 60 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அணுகியதால் இணையதளம் முடங்கியது. இன்று மாலைக்குள் இ-பதிவு இணையதளம் சரி செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு இன்று காலையுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது ஜூன் 14-ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எலக்ட்ரீசியன், பிளம்மர், கணினி பழுது , மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள் இ-பதிவு செய்தபின் பணிக்கு செல்லலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. இதனால், அதிகமானோர் இ - பதிவு இணையத்தில் விண்ணப்பிக்க முயன்றனர். ஆகையால், இ-பதிவு இணையதளம் முடங்கியது.

இந்நிலையில், இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில்;- ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ- பதிவு செய்ய இணைய தளத்திற்கு வந்த காரணத்தால் தான் இணையதளம் முடங்கியது. விரைவில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!