#BREAKING இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி..!

Published : Jun 07, 2021, 02:14 PM IST
#BREAKING  இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி..!

சுருக்கம்

கொரோனா 2வது அலை ஏற்பட்டதற்கு பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நேரடியாக உரையாற்றுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா 2வது அலை ஏற்பட்டதற்கு பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நேரடியாக உரையாற்றுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவில் முதல் அலையை விட கொரோனா 2வது கோரத்தாண்டவம் ஆடியது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை எட்டியதால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 1 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது. அதேபோல், சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. ஆகையால், தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கை தொடங்கியுள்ளது. 

இந்நிலையில்,  இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு இடையே  பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அப்போது, கொரோனா 2வது அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நலத்திட்ட உதவிகள் தொடர்பாக அறிவிக்க வாய்ப்புள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2வது அலை ஏற்பட்டதற்கு பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் நேரடியாக உரையாற்றுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில், முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!
Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!