#BREAKING: சொத்து குவிப்பு வழக்கு.. அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து.. தண்டனை என்ன?

By vinoth kumarFirst Published Dec 19, 2023, 11:09 AM IST
Highlights

கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின் போது, அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவுச் செய்தது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து  குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த 2006 - 2011-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு ரூ.1.75 கோடிக்க அதிகமாக சொத்துச் சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்து கடந்த 2016- ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. 

Latest Videos

இதனை எதிர்த்து  லஞ்ச ஒழிப்புத்துறை 2017- ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது 39 சாட்சியங்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட புலன் விசாரணை ஆதாரங்களை சமர்பிக்கப்பட்டன. 

அப்போது பொன்முடி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களில் உண்மைத்தன்மை இல்லை என்றும், மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கிட்டுள்ளதாகவும் பொன்முடி தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்த தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், 64.90 சதவீதம் வருமாகத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமானதை அடுத்து பொன்முடியை விடுதலை செய்தது செல்லாது. மேலும் தண்டனை விவரங்கள் வரும் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும். அன்றைய தினம் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

click me!