நான் 2ஜி வழக்கையே பார்த்தவன்.. சொத்துகுவிப்பு வழக்கு எல்லாம் எனக்கு அசால்டு.. அசராத ஆ.ராசா..!

By vinoth kumar  |  First Published Oct 18, 2022, 8:20 AM IST

மத்தியில் ஆளும் பாஜக அரசையும், அவர்களின் கொள்கைகளையும் சவால்விடும் வகையில் நான் பேசிவருகிறேன். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தேர்தலைக் குறிவைத்து சொத்துக்குவிப்பு என என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள்.


தூய்மை இந்திய திட்டத்தில் மோடி அரசு நாடு முழுவதும் கட்டி உள்ள கழிப்பறைகளில் 80 சதவீத கழிப்பறைகள் பயன்படுத்தபடாமல் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தமிழக விருந்தினர் மாளிகையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. இதில், நீலகிரி எம்.பி. கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- 5 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 5 கோடி ரூபாய் சொத்து என்னுடையது அல்ல. மற்றவர்களுக்குச் சொந்தமானது. இந்தச் சொத்துகளை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ என அனைத்துத் துறையினரும் ஆய்வுசெய்து இவை ராசாவுக்குச் சொந்தமானது இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை.. காவல் துறை அதிரடி

மத்தியில் ஆளும் பாஜக அரசையும், அவர்களின் கொள்கைகளையும் சவால்விடும் வகையில் நான் பேசிவருகிறேன். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தேர்தலைக் குறிவைத்து சொத்துக்குவிப்பு என என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள். 2-ஜி வழக்கையே பார்த்தவன் நான். இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. நான் பார்த்துக்கொள்வேன் என்றார்.

மேலும், மத்திய அரசு இந்தியாவில் கட்டிய  80 சதவீத கழிப்பிடங்கள் பயனற்று உள்ளது. கழிப்பிடங்கள் பயன்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என ஆ.ராசா கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு

click me!