அமித்ஷாவிற்கு எதிராக களம் இறங்கிய ஸ்டாலின்...! அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சியில் பாஜக

By Ajmal Khan  |  First Published Oct 18, 2022, 8:04 AM IST

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்ட பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தீர்மானத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 


தமிழக சட்ட பேரவை கூட்டம்

தமிழக சட்டபேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், இங்கிலாந்து ராணி, உத்திரபிரதேச முன்னால் முதல்வர் முலாயம் சிங், சட்ட பேரவை முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் சட்டசபையை இரண்டு நாட்களுக்கு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தநிலையில் இன்றைய கூட்டத்தில்  2022-2023 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவினங்கள் வரவு செலவு திட்டத்தினை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம்

மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு குடியரசுத் தலைவரிடம் 112 பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலான பரிந்துரைகள் இந்திமொழியை திணிக்கும் முயற்சியாகவே உள்ளதாக தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும்  மத்திய  கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும் என்றும், ஆங்கிலம் விருப்ப மொழியாக மட்டுமே இருக்கும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இது போன்ற நடவடிக்கை மாநில மொழிக்கு எதிரானது என திமுக, கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனையடுத்து திமுக இளைஞர் அணி சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

20 நாளில் தமிழகத்தை முற்றுகையிடும் 50 மத்திய அமைச்சர்கள்.! என்ன காரணம் தெரியுமா.? ஸ்டாலினை அலறவிடும் அண்ணாமலை

எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக

இதனையடுத்து இன்று நடைபெறவுள்ள சட்ட பேரவை கூட்டத்தில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும் அம்மொழிகளை பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் அமித்ஷா தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரைகளை நடமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தீர்மானத்திற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளிக்கும் நிலையில் பாஜகவினர் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வார்கள் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

ஒரு சிலரின் நலனுக்காக அதிமுக சட்ட விதியில் மாற்றம்..! இபிஎஸ்யை விளாசிய ஓபிஎஸ்

click me!