கமல், மு.க.அழகிரி யார் வந்தாலும் திமுக 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.. அடித்து கூறும் வேல்முருகன்..!

Published : Jan 10, 2021, 04:37 PM IST
கமல், மு.க.அழகிரி யார் வந்தாலும் திமுக 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.. அடித்து கூறும் வேல்முருகன்..!

சுருக்கம்

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. 

ரஜினிகாந்த், கமல்ஹாசன், மு.க.அழகிரி என யார் வந்தாலும் திமுக 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி பகுதியில் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. இலங்கை யாழ்ப்பாணத்தில் நினைவு தூண் இடிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

தேர்தல் ஆதாயத்திற்காக பாமக இடஒதுக்கீடு கொள்கையை கையில் எடுத்துள்ளது. வன்னியர்கள் இடஒதுக்கீடு போராட்டம் குறித்து வேல்முருகன் விமர்சனம் செய்துள்ளார். 

ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடுக்கப்படாவிட்டால், எதிர் காலத்தில் மிகமோசமான சமூக, பொருளாதார பிரச்சனைகள் ஏற்படக்கூடும். லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழியும். எனவே நாட்டு மக்களின் நலன்களை கருதில் கொண்டு, ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு அரங்கேறிய பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!