வைகோ, திருமாவை தொடர்ந்து முத்தரசன் அதிரடி... அதிர்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Jan 10, 2021, 4:17 PM IST
Highlights

அதிமுக  கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளையும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வைத்தாரோ அதேபோல, இந்தமுறை திமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 

வரும் சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக, காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தேனி ஒரு தொகுதியைத் தவிர்த்து புதுச்சேரி உட்பட 39 இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கூட்டணிக் கட்சிகள் இணைந்து பல போராட்டங்களை நடத்தின. அந்தக் கூட்டணி இப்போதுவரை எந்த விரிசலும் இல்லாமல் சுமுகமாகவே சென்றுகொண்டிருந்தது. 

ஆனால், இந்தமுறை, திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான இடங்களை ஒதுக்கவிருப்பதாகவும், கூடவே மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகின. 

கடந்த 2016 தேர்தலில், நூலிழையில் திமுக வெற்றியைத் தவறவிட்டதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கியதே காரணம் என திமுக தலைமை கருதுவதாக செய்திகள் வெளியாகின. கூடவே, அந்தத் தேர்தலில், எப்படி அதிமுக  கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளையும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வைத்தாரோ அதேபோல, இந்தமுறை திமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.  இதனையடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அலறியடித்துக் கொண்டு எங்கள் கட்சி உதயசூரியன் தனிச்சின்னத்தில் போட்டியிடாது. தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தனிச் சின்னத்தில் போட்டியிவோம் என்று அறிவித்துள்ளனர்.வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன்;- ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது சில தேசிய கட்சிகளின் விருப்பம். ரஜினியின் ஆரோக்கியத்தையும், அவர் நடிக்க வேண்டும் என்பதையே ரசிகர்களும், மக்களும் விரும்புகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிவோம் என்றும் முத்தரசன் கூறியுள்ளார். 

click me!