அரியர் பசங்க நாங்க... எங்க ஓட்டு இரட்டை இலைக்கே.. முதல்வருக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த இளைஞர்கள்..!

Published : Mar 19, 2021, 11:00 AM IST
அரியர் பசங்க நாங்க... எங்க ஓட்டு இரட்டை இலைக்கே.. முதல்வருக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த இளைஞர்கள்..!

சுருக்கம்

நாகையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டிருந்த போது அரியர் பசங்க நாங்க என்ற பதாகைகளுடன் மொட்டைமாடியில் நின்று அவருக்கு இளைஞர்கள் வரவேற்பு அளிப்பதை பார்த்தது முதல்வர் நெகிழ்ந்து வியந்துபோனார். 

நாகையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டிருந்த போது அரியர் பசங்க நாங்க என்ற பதாகைகளுடன் மொட்டைமாடியில் நின்று அவருக்கு இளைஞர்கள் வரவேற்பு அளிப்பதை பார்த்தது முதல்வர் நெகிழ்ந்து வியந்துபோனார். 

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்க.கதிரவனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகை அவுரி திடலில் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். திமுகவுக்கு குடும்பம்தான் ஆட்சி. கருணாநிதி அவருக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி என்று திமுகதான் குடும்ப அரசியலை நடத்தி வருகிறது.

நீங்கள் என்ன அரச பரம்பரையா, திமுகதான் ஊழல் கட்சி. ஊழல் என்ற வார்த்தை உருவானதே திமுக ஆட்சியில்தான் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்த திடலுக்கு எதிரே இருந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் வரிசையாக நின்றிருந்த இளைஞர்கள், "எடப்பாடியார், அரியர் பசங்க நாங்க! எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கு!" என்று எழுதிய பதாகைகளை உயர்த்தியும், ஆக்ரோஷமாகக் குரலை உயர்த்தியும் முழக்கமிட, இதைச் சற்றும் எதிர்ப்பார்த்திடாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி முகமலர்ச்சியோடு அதனைக் கண்டு வியந்துபோனார். மேலும், அங்கு கூடியிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!