ஒன்றிய அரசு என்பதன் விளக்கத்தை தமிழிசையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.. ஓபிஎஸ்சை திருப்பி அடித்த மா.சு.

By Ezhilarasan BabuFirst Published Jul 5, 2021, 10:44 AM IST
Highlights

கோவாக்சின், கோவிட் ஷீல்டு எந்த தடுப்பூசி தகுதியானது என்பது குறித்து செய்திகள் பரவி வருகின்றன முறையாக ஐசிஎம்ஆர் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்பே தான் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது, அனைத்துமே தகுதியானதுதான் என தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக சிறுபான்மை நலப்பிரிவு மாநில துணை செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஏற்பாட்டில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை  நலத்திட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் வழங்கினார்.சாலை விபத்தில் மரணம் அடைந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியதாவது, ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் எந்தெந்த தடுப்பூசிகள் போடப்படுகிறது என்று  அந்தந்த மாவட்டங்களில்  முறைப்படுத்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது, தடுப்பூசி போடும் மையங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது, தடுப்பூசி போடும் பணிகள் சிறப்பாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது, கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அனைத்து முகாம்களிலும் தடுப்பு ஊசி போடுவதற்கு வலியுறுத்துகிறோம். தடுப்பூசி போடுவதற்கு டோக்கன்கள் வழங்குவதில் குளறுபடி இருப்பதற்கு  பதிலளித்த அமைச்சர் இங்கிருந்து தடுப்பூசிகள் எவ்வளவு அனுப்பபடுகிறதோ அதற்கேற்றாற்போல் டோக்கன்ங்கள் வழங்கப்பட்டு தடுப்பூசிகளை வழங்கி வருகிறார்கள், 100  டோக்கன் கொடுத்தால் 100 தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள் மக்கள் மத்தியில் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

 

தடுப்பூசியை ஒன்றிய அரசிடம் கேட்டுப் பெறுவதில் அதிகளவில் நாட்டம் செலுத்தி ஒன்றிய அரசுடன் பேசி கேட்டுப் பெறுவதில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம். ஜூலை மாதம் வரவேண்டிய 10 லட்சம் அளவிற்கு தடுப்பூசி முதல் வாரத்திலேயே வரும் என எதிர்பார்க்கிறோம், இன்று அல்லது நாளையில் வந்த பின்பு அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படும் பணிகளை மேற்கொள்வோம் என அமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய அரசு எனக் கூறி திமுக பிரிவினையை உண்டாக்குவதாக முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறிய கருத்திற்கு பதிலளித்த அமைச்சர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். ஒன்றிய அரசு குறித்து விரிவான விளக்கங்களை வெளியிட்டிருக்கிறார், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

கோவாக்சின், கோவிட் ஷீல்டு எந்த தடுப்பூசி தகுதியானது என்பது குறித்து செய்திகள் பரவி வருகின்றன முறையாக ஐசிஎம்ஆர் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்பே தான் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது, அனைத்துமே தகுதியானதுதான் என தெரிவித்தார்.தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு கடைகளில் கூட்டங்கள் அதிகளவில் காணப்படுவதற்கு குறித்து பேசிய அமைச்சர், அரசின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாகவும், முதல்வர் நேற்றைய தினம் கூட ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், மூன்றாம் அலையை தடுக்கும் விதமாக பொதுமக்கள் தனிமனித இடைவெளியை அதிகளவில் கடைபிடிக்கவேண்டும், முக கவசம் அணிய வேண்டும், தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும், சானிடைசர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், கடைகளில் அதிக அளவில் கூட்டங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், அரசும் இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
 

click me!