குஜராத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கும் வகையில் பிரச்சாரங்களை வகுத்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியும் ஆட்சியை பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.
ஏசியாநெட் நியூஸ் மற்றும் சிபோர் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது. குஜராத் தேர்தல் இப்போது நடத்தப்பட்டால், 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக 133 முதல் 143 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி முறையே 28 முதல் 37 மற்றும் 5 முதல் 14 இடங்களைப் பெறலாம் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..பிரதமர் மோடியின் ஆட்சி சூப்பர்..பாஜகவுக்கு தான் ஓட்டு.! ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பில் தகவல்!
சுமார் 1,82,557 வாக்காளர்களின் கருத்தை முறையான மாதிரி முறையைப் பயன்படுத்தி எடுத்த சர்வே முடிவை விரிவாக இங்கு பார்க்கலாம். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸின் வாக்குகளை பிரிகிறது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் முறையே 31 மற்றும் 16 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
குஜராத் தேர்தல் இப்போது நடத்தப்பட்டால், 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக 133 முதல் 143 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி முறையே 28 முதல் 37 மற்றும் 5 முதல் 14 இடங்களைப் பெறலாம். காங்கிரஸின் வாக்கு சதவீதம் 10 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க..குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் & ஆம் ஆத்மி நிலை ? ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் !