பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முக்கிய பிரமுகர்.. மகிழ்ச்சியில் கமல்ஹாசன்.!

Published : Dec 10, 2022, 01:20 PM ISTUpdated : Dec 10, 2022, 01:27 PM IST
பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முக்கிய பிரமுகர்.. மகிழ்ச்சியில் கமல்ஹாசன்.!

சுருக்கம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்த சில மாதங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் திடீரென விலகி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்து கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அருணாச்சலம் தற்போது மீண்டும் கமல்ஹாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்த சில மாதங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் திடீரென விலகி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்து கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர், சட்டமன்ற தேர்தலை தோல்வியை அடுத்த மகேந்திரன் உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேறினர். 

இதையும் படிங்க;- தமிழக பாஜகவில் பெண்கள் என்றால் ஒரு நீதியும், ஆண்கள் என்றால் ஒரு நீதியா? அண்ணாமலையை அலறவிடும் மநீம..!

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள்  பொதுச்செயலாளர் அருணாச்சலம் மீண்டும் கமல்ஹாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீததி மய்யம் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில்;- மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிறுவனப் பொதுச் செயலாளர் அருணாச்சலம் நமது தலைவர், நம்மவர் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து இன்று நமது கட்சியில் மீண்டும் இணைந்தார்.

அரசியலில் ஆழங்காற்பட்ட அனுபவம் மிக்க அருணாச்சலம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த நம்மவர் அவர்களால்தான் முடியும் என்பதை உணர்ந்து களப்பணியாற்றியவர். அவர் மீண்டும் நம்மோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரை மனதார வாழ்த்தி வரவேற்கிறேன். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தினை பெருவெற்றியடைய செய்யவேண்டுமெனும் உயரிய நோக்கத்துடன் உழைக்க வந்திருக்கும் அருணாச்சலம் அவர்களோடு மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும், அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைத்து நமது கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உதவவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் கமல்ஹசன் முன்னிலையில், தமிழக பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவர் முனியசாமி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  அமைச்சர்னா வானத்தில் இருந்து வந்து குதித்த தேவ தூதன் என்கிற நினைப்போ.. பொன்முடிக்கு எதிராக பொங்கும் மநீம..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!