இனிமே வருடம் வருடம் மின் கட்டணம் உயரும்... முன்னான் அமைச்சர் தங்கமணி அதிர்ச்சி தகவல்..!

Published : Dec 10, 2022, 12:41 PM ISTUpdated : Dec 10, 2022, 12:43 PM IST
இனிமே வருடம் வருடம் மின் கட்டணம் உயரும்... முன்னான் அமைச்சர் தங்கமணி அதிர்ச்சி தகவல்..!

சுருக்கம்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகள் மின்துறை சார்பில் வெளியிடுவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் அரசின் நிர்வாக திறன் இல்லாததை காட்டுகிறது.

ஒரே குடும்பத்தில் இரண்டு மின் இணைப்பு உள்ள நிலையில் ஆதார் எண் இணைக்கும் போது 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் நிலை இருக்கிறது என முன்னான் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பேரூராட்சி சார்பில் காவேரி ஆர்எஸ் பகுதியில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க;- அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான்.. எடப்பாடி பேசினால் நான்..! முடிச்சு போட்ட ஓபிஎஸ் !

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்கமணி;- மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகள் மின்துறை சார்பில் வெளியிடுவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் அரசின் நிர்வாக திறன் இல்லாததை காட்டுகிறது. அதிமுக ஆட்சியில் விவசாயத்திற்கு மின் இணைப்புடன் மீட்டர் பொருத்தும் போது எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது எதற்காக மின் இணைப்புடன் மீட்டர் வைத்து வருகிறார் என்பதற்கு திமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். 

தமிழகத்தில் மின் கட்டணம் தற்போது 6 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலும் ஆறு சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வருடம் தோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். 

ஒரே குடும்பத்தில் இரண்டு மின் இணைப்பு உள்ள நிலையில் ஆதார் எண் இணைக்கும் போது 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் நிலை இருப்பதால், இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் எனக் கூறினார்.

இதையும் படிங்க;-  தங்கமணி கோட்டையில் புகுந்து வேட்டை.. முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் இபிஎஸ்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!