சென்னையில் மின்தடை எப்போது சீராகும்..? அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய தகவல்..!

By vinoth kumarFirst Published Dec 10, 2022, 11:02 AM IST
Highlights

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, மாமல்லபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவு முதல் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. 

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்ட சில இடங்களிலும், இன்று  மதியத்திற்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, மாமல்லபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவு முதல் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இதையும் படிங்க;- மாண்டஸ் புயலால் சென்னையின் தற்போதைய நிலை என்ன? போக்குவரத்து காவல்துறை தகவல்..!

இந்நிலையில், மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 355 துணை மின் நிலையங்களில் 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இரவு முழுவதும் 11,000 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் மட்டும் 1,100 மின் பணியாளர்கள் காலை முதல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மின் விநியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்று மதியத்திற்குள் 100 சதவீதம் முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், சேதம் அடைந்த மின்கம்பங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் ஆய்வு செய்து வருகிறது. மழை காரணமாக மின்சாரத்துறையில் பெரிள அளவில் சேதம் ஏற்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- உயிர் பலி வாங்கிய மாண்டஸ் புயல்.. அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 2 பேர் பலி

click me!