தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு கொலை வழக்கு மற்றும் ஊழல் வழக்கில் உடனே கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடருமா ? அல்லது ஜூலை 11ல் முடிவுக்கு வருமா ? என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை கவலையை ஏற்படுத்தி உள்ளது.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சி இப்படியொரு சூழலை சந்தித்திருப்பதுதான் அவர்களது கவலையாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !
கொடநாடு கொலை வழக்கு மற்றும் ஊழல் வழக்குகளில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ய வேண்டும் என்றும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் தூத்துக்குடி மாவட்ட பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்
பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் இசக்கிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மீது நீங்கள் பாட்டில் தண்ணீர் பாட்டில் தான் வீசியர்கள் ஆனால் நாங்கள் எதை வீசுவோம் என்று உங்களுக்குத் தெரியும் என மாநில தலைவர் இசக்கிராஜா கடும் எச்சரிக்கையாக தெரிவித்தார். இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையா? எ.வ வேலு காலேஜ்ல வைங்க பார்க்கலாம் - எச்.ராஜா கொந்தளிப்பு